முகப்பு

புதன், 29 டிசம்பர், 2010

அபுதாபி பன்யாஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் 1வது கிளையில் கடந்த 08-11-10 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் சகோ கனி அவர்கள் இதில் உரை நிகழ்த்தினர்கள்.
அனைத்து ஏற்பாடுகளையும் பன்யாஸ் 1வது கிளையின் செயலாளர் தஞ்சை சாதிக் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே!

பன்யாஸ் கிளையில் தஃவா நிகழ்ச்சி

 

 


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பன்யாஸ் கிளையில் கடந்த 20-12-10 அன்று சிறு அரங்கத்தில் தஃவா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் சகோ கனி அவர்கள் தொழுகையின் பயன்கள் என்ற தலைப்பு உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அபுதாபியில் நடைபெற்ற இரத்த தான முகாம்

 இரத்த தானங்கள்



கடந்த 24/12/2010 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அபுதாபி ஷேக்கலீபா மெடிகல் சிட்டி இரத்தவங்கியும் இணைந்து மெகா இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. அல்ஹ‌ம்துலில்லாஹ்.
முகாம் நடைபெற்ற நாள் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அத்துடன் நேரம் காலை ஒன்பது மணி என்பது வளைகுடா பகுதியை பொறுத்தவரை ஓய்வு நேரம் இருந்தாலும், இறையருளால் எதிர் பார்த்ததை விட மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் குருதியை தானமாக வழங்கினார்கள்.
காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை இரத்த தானம் செய்ய மருத்துவ குழுவினர் நேரம் ஒதுக்கியிருந்தனர். சகோதரர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதை அறிந்து மருத்துவ குழுவினர் மதியம் 3.30 வரை நேரத்தை அதிகபடுத்தினர். கிடைத்த நேரத்தில் 82 சகோதரர்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.
இடையில் ஜூம்மா தொழுகைகாக நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அனைத்து சமுதாய பணிகளிலும் மனித நேயம் மிகைத்திருக்கும் அதன் அடிப்படையில்தான் இந்த இரத்த தான முகாமும் நடத்தப்பட்டு வருகின்றது. முகம் தெரியாத‌ யாரோ ஓர் சகோதர சகோதரிக்கு உதிரத்தை தந்து உதவுவதன் நோக்கம் திருமறையில் உள்ள ஓர் வசனத்தின் அடிப்படைதான் காரணம் ‘ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” .
இரத்த தானத்திற்காக டி.என்.டி.ஜே தமிழகத்திலும் வளைகுடா பகுதிகளிலும் பல பதக்கங்கiயும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் இதை விட உயர்ந்த பாரட்டுதலை மறுமையில் அல்லாஹ்விடம் பெற வேண்டும் என்பதுதான் ஜமாஅத்தின் லட்சியம்.
இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர். வாகன வசதி மற்றும் இரத்த தானம் செய்ய வந்த சகோதரர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை தொண்டரணியினர் மண்டல கணக்காளர் சகோ. எலந்தங்குடி அஷ்ரஃப் தலைமையில் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்! அல்ஹம்துலில்லாஹ்!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அபுதாபி பனியாஸ் கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பனியாஸ் 2வது கிளையின் சார்பாக கடந்த 01-09-2010 புதன் கிழமையன்று இரவு 9.15.மணிக்கு மாபெரும் மார்க்க கூட்டம் பனியாஸ்சில் மஜண்டா கேம்பில் நடைப்பெற்றது.


இக்கூட்ட்த்தில் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில துணை தலைவர் சகோதரர் M.I சுலைமான் அவர்கள் முஸாஅப் பின் உமைர் {ரலி} அவர்களின் வாழ்வுதரும் படிப்பினை என்ற தலைப்பில் எழுச்சி உரை நிகழ்த்தினர்கள்.அதனை தொடந்து மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்டு பதில்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல கிளைகளின் பொறுப்பாளர் புளியங்குடி முஹம்மதுகனி தலைமை தாங்கினர்.இந்த நிகழ்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


 அனைத்து ஏற்படுகளும் பன்யாஸ் 2வது கிளை தலைவர் பஸீர் தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டன அல்ஹ்ம்துலில்லாஹ்

அபுதாபி TNTJ ரூபாய் 16 ஆயிரம் மருத்துவ உதவி!


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளைத்தை சேர்ந்த ஆலாபிள்ளைத் தெருவை சேர்ந்த முகைதின் பிள்ளை அவர்களின் மனைவி ஹபீபா (வயது42) என்ற சாகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமப்பட்டு  வந்தார்

அவருடைய குடும்பமும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் காரணத்தினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்திடம் உதவி கேட்டு அபுதாபி TNTJ யிடம் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் பன்யாஸ் 2வது கிளையின் சார்பாக கிளை தலைவர் பசிர் அவர்கள் பன்யாஸ் கிளையில் வசுல்செய்பட்ட இந்திய ரூபாய் 16,500 ஐ கடந்த 27/09/2010 அன்று சம்பந்தபட்டவர்ளிடம் மருத்துவ உதவியாக வழங்கினார்கள்.

அபுதாபி பன்யாஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் 1வது கிளையில் கடந்த 08-11-10 அன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர். தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் சகோ கனி அவர்கள் இதில் உரை நிகழ்த்தினர்கள்.

அனைத்து ஏற்பாடுகளையும் பன்யாஸ் 1வது கிளையின் செயலாளர் தஞ்சை சாதிக் தலைமையில் ஏற்பாடு செய்யபட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே

அபுதாபி பன்யாஸ் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் பன்யாஸ் கிளையில் கடந்த 7-12-10 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அபுதாபி கிளைகளின் பொறுப்பாளர் புளியங்குடி முஹம்மது கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

தாயகத்தில் இருந்து வருகை தந்த டி ன் டிஜே மோலண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் “நாவின் விபரிதங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அனைத்து ஏற்பாடுகளைளும் பன்யாஸ் கிளை தலைவர் பஷிர் அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது எல்லாபுகழும் இறைவனுக்கே

அநாதை இல்லம்

பெற்றோர்களால் கைவிடப்பட்டு திக்கற்று நிற்கும் குழந்தைகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் அநாதை இல்லம் நடத்தி வருகின்றது
.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
பெற்றோர்கள் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லது பெற்றோர்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்க வேண்டும்
குறைந்த பட்சம் 8 வயது இருக்க வேண்டும்.


இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு:
  1. இவர்கள் அரசு மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்து கல்வி பயில வைக்கப்படுவார்.
  2. இவர்களுக்கு மாலையில் சிறந்த ஆசிரியர்கள் மூலம் டியூஷன் எடுக்கப்படும்
  3. காலையில் TNTJ தாயிகள் மூலம் இஸ்லாமிய வகுப்புகள் நடத்தப்படும்
  4. நல்லொழுக்க பயிற்றிகள் அளிக்கப்படும்
மேலும் இவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவம், ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
முகவரி

34, முஸ்லிம் தெரு, மேல்பட்டாம் பாக்கம்
கடலூர்.
சேல்: +91 9952057222, +91 9952056444

இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

பெண்கள் தஃவா சென்டர்

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமான பெண்கள் வருகை தருகிறார்கள். அவர்களுக்காக சேலத்தில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி பெண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.

பாடத்திட்டங்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
பெண்களுக்கான இஸ்லாமியச் சட்டங்கள்
திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
துஆ மனனம்
தொழுமை முறை
நபிகளார் வரலாறு
இஸ்லாமிய ஒழுங்குகள்
பெண்கள் என்பதால் மிகுந்த பாதுகாப்போடும் சரியான கண்காணிப்புடனும் இந்நிறுவனம் நடத்தப்படுகின்றது.

மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.

முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம்,
சேலம்-636005
செல்:+91 9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

ஆண்கள் தவ்ஹீத் கல்லூரி

ஆண்கள் தவ்ஹீத் இஸ்லாமிய கல்லூரி
tc2
இக்கல்லூரியில் 2 வருடம் மார்க்க கல்வி பின் வரும் பாட அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படுகின்றது.
  1. இஸ்லாமிய கொள்கை விளக்கம்
  2. திருக்குர்ஆன் விளக்கவுரை
  3. ஹதீஸ் கலை
  4. நபிவழிச் சட்டங்கள்-மத்ஹபு சட்டங்கள் ஒப்புநோக்கு
  5. நபிகளார் வரலாறு
  6. அரபி மொழி இலக்கண சட்டங்கள்
  7. அரபி மொழி பேச எழுத பயிற்சி
  8. திருக்குர்ஆனை ஓதும் முறை
  9. வாரிசுரிமைச் சட்டங்கள்
  10. சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, விவாத பயிற்சி
  11. கணிணி பயிற்சி
மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் உணவு மற்றும் தங்குமிடம் முற்றிலும் இலவசமாக 2 வருடம் கால பாடத்திட்டத்தில் இக்கல்லூரி நடத்தப்படுகின்றது.
கல்லூரியில் சேருவதற்காக குறைந்த பட்சம் தேவையான தகுதிகள்:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், திருக்குர்ஆனை சரளமாக ஓத தெரிந்திருக்க வேண்டும்.
கல்வி ஆண்டின் துவக்கம்: ஜுலை 1
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம், சேலம்-636005
செல்:9790892220, 9381509588
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

முதியோர் இல்லம்

muthiyorமுதியோர் ஆதரவு இல்லம்
muthi_1
பிள்ளைகள் மற்றும உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது.
இதில் சேருவதற்கான நிபந்தனைகள்:
  1. பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவராக இருக்க வேண்டும்
  2. அவருடைய தேவையை (மலம் ஜலம் கழித்தல், குளித்தல் மட்டும்) அவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முதியோர் இல்லத்திற்கு வந்த பிறகு அவர்களுக்கு எந்நிலை ஏற்பட்டாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதை கவனித்துக் கொள்ளும்.
இல்லத்தில் சேருவோருக்கு
உணவு,
தங்குமிடம்,
மருத்துவம்,
ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு இதர செலவிற்கு பணமும் வழங்கப்படும்.
சேருவதற்கு எந்த கட்டணமும் கிடையாது.
முகவரி:
37, முஸ்லிம் தெரு,
மேல்பட்டாம் பாக்கம்,
கடலூர்
போன்: 9952057222, 044 25215226
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

ஆண்கள் தஃவா சென்டர்

இஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் ஆண்களுக்காக சேலத்தில் மூன்று மாதம் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.
பாடத்திட்டங்கள்:
  1. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
  2. திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி
  3. துஆ மனனம்
  4. தொழுமை முறை
  5. நபிகளார் வரலாறு
  6. இஸ்லாமிய ஒழுங்குகள்
மேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதை போன்று இலவசமாக  இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.
முகவரி:
24/11E, ஆசாத் நகர், சூரமங்கலம்,
சேலம்-636005
செல்:9790892220, 9381509588
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்
செலவு விபரங்கள்
aangal-dawa

பெண்கள் தவ்ஹீத் கல்லூரி

தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
31
ஒரு வருட ஆ­லிமா பட்டப்படிப்பு வகுப்பில்  நபி வழிச் சட்டங்கள், அரபி இலக்கணம், நபி (ஸல்) அவர்கள் வரலாறு, திருக்குர்ஆன் ஓதும் சட்டங்கள், இஸ்லாமியக் கொள்கை விளக்கம், அரபி மொழியியல், வாரிசுரிமைச் சட்டங்கள், சொற்பயிற்சி, கட்டுரை பயிற்சி, சிறு தொழில் பயிற்சி, கணணி பயிற்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் தகுதியான ஆசிரியைகளைக் கொண்டு பாடம் நடைபெறுகிறது.
கல்வியாண்டு துவக்கம் : ஜூன் 1
தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
24/11E, ஆசாத் நகர்
சூரமங்களம்,
சேலம் – 636005
தொலை பேசி : 9976649599
இந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள்

செவ்வாய், 14 டிசம்பர், 2010

அபுதாபியில் சிறுஅரங்க பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்கித் ஜமாத் பன்யாஸ் கிளையில் 18-12-10 அன்று சிறு அரங்கத்தில் வைத்து நடைப்பெற்றது இதில் சகோ கனி நேரத்தின் பயன்கள் என்ற தலைப்பு உரையாற்றினார்கள் இதில் அதிகமானவர்கள் கலந்து கெண்டார்கள் எல்லாபுகழும் இறைவனுக்கே