முகப்பு

புதன், 29 டிசம்பர், 2010

அபுதாபியில் நடைபெற்ற இரத்த தான முகாம்

 இரத்த தானங்கள்



கடந்த 24/12/2010 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அபுதாபி ஷேக்கலீபா மெடிகல் சிட்டி இரத்தவங்கியும் இணைந்து மெகா இரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. அல்ஹ‌ம்துலில்லாஹ்.
முகாம் நடைபெற்ற நாள் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அத்துடன் நேரம் காலை ஒன்பது மணி என்பது வளைகுடா பகுதியை பொறுத்தவரை ஓய்வு நேரம் இருந்தாலும், இறையருளால் எதிர் பார்த்ததை விட மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் குருதியை தானமாக வழங்கினார்கள்.
காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை இரத்த தானம் செய்ய மருத்துவ குழுவினர் நேரம் ஒதுக்கியிருந்தனர். சகோதரர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதை அறிந்து மருத்துவ குழுவினர் மதியம் 3.30 வரை நேரத்தை அதிகபடுத்தினர். கிடைத்த நேரத்தில் 82 சகோதரர்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.
இடையில் ஜூம்மா தொழுகைகாக நேரம் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யும் அனைத்து சமுதாய பணிகளிலும் மனித நேயம் மிகைத்திருக்கும் அதன் அடிப்படையில்தான் இந்த இரத்த தான முகாமும் நடத்தப்பட்டு வருகின்றது. முகம் தெரியாத‌ யாரோ ஓர் சகோதர சகோதரிக்கு உதிரத்தை தந்து உதவுவதன் நோக்கம் திருமறையில் உள்ள ஓர் வசனத்தின் அடிப்படைதான் காரணம் ‘ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” .
இரத்த தானத்திற்காக டி.என்.டி.ஜே தமிழகத்திலும் வளைகுடா பகுதிகளிலும் பல பதக்கங்கiயும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் இதை விட உயர்ந்த பாரட்டுதலை மறுமையில் அல்லாஹ்விடம் பெற வேண்டும் என்பதுதான் ஜமாஅத்தின் லட்சியம்.
இரத்த தான முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர். வாகன வசதி மற்றும் இரத்த தானம் செய்ய வந்த சகோதரர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளை தொண்டரணியினர் மண்டல கணக்காளர் சகோ. எலந்தங்குடி அஷ்ரஃப் தலைமையில் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்! அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை: